யாழில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்

யாழில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இந்த தகவலை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்தின அறிவித்தார். 

யுத்தத்தில் காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இல்லை என்று பிரதமர் யாழில் தெரிவித்த கருத்துக் குறித்து அமைச்சரவைப் பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

யாழில் காணாமல் போனவர்கள் தொடர்பில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் இதன்போது கூறினார்.