யாழில் கைபேசியில் ஆபாச வீடியோ பார்த்த நபர்.

கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்த நபர் யாழ் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர், யாழ்ப்பாணம் கல்லட்டி சந்தியில் நின்று தொலைபேசியில் ஆபாச படத்தினை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது அந்த வீதியால் சென்ற பொலிஸார் நபரின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கையடக்கத் தொலைபேசியை பரிசோதனை செய்து பார்த்து உடனடியாக நபரை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.