தென்மராட்சியில் விபத்துக்களில் 8 பேர் காயம்

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற பல்வேறு விபத்துச் சம்பவங்களில் காயமடைந்த 8 பேர் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 வயதுச் சிறுமி மற்றும் 3 பெண்கள் உட்பட 8 பேர் தொடர்ந்தும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் இரண்டு மோட்டார் சைக்கில்கள் மோதிக் கொண்ட விபத்துச் சம்பவத்தில் 4 பேரும், வேகக் கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவரும், துவிச்சக்கர வண்டி விபத்தில் இருவரும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றன.