யாழில் 12லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை!!

யாழ்.கந்தர்மடம் 5ஆவது லேன் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 12இலட்சத்து 94ஆயிரத்து 270 ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் என்பன களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.