ஜனாதிபதி தலைமையின் கீழ் முன்னோக்கிச் செல்ல வேண்டும்-பிரதமர்

நாடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் முன்னோக்கிச் செல்லவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைவர்களை விட, ஜனாதிபதி சிறிசேனவினால் அதிக சாதனைகளை அடைய முடியும்என கூறியிருந்தார்.

நாட்டில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் தற்போது ஒற்றுமையாக செயற்பட்டுவருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு அபிவிருத்தியடையும்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஒற்றுமைக்காக புதிய அரசியலமைப்பு உருவாக்க இருப்பதாகவும் பிரதமர் ரணில்விக்ரமசிங்க கூறியுள்ளார்.

கொத்மலை மஹாசாய தூபி திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதேபிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டமைகுறிப்பிடத்தக்கது.