கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரி!

கோப்பாய் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.ஹகந்தவெல, தனது கடமைகளை  இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த மூன்று வருடங்களாக பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய ஸ்ரீநிக சஞ்ஜீவ ஜெயக்கொடி, வென்னப்புவ பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதை அடுத்து, பொலிஸ் பரிசோதகர் ஹகந்தவெல, கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது கடமைகளினை பொறுப்பேற்றுக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொறுப்பதிகாரி, பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி பிரதேசத்தில் இடம்பெறும் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்கள் பொலிஸாருடன் நட்பாக பழகுவதன் மூலமே குற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் என தெரிவித்தார்.