ஜனாதிபதியின் கைத்தொலைபேசி பாவனை! வியப்பில் அரசியல்வாதிகள்!!

நாட்டில் ஜனாதிபதி மட்டுமே கையடக்கத் தொலைபேசியை சரியான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்தே இதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல்களுக்கு வரும் போது ஒரு சிலருடைய தொலைபேசிகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக கலந்துரையாடல்களை மேற்கொள்வது கடினம். ஜனாதிபதி தனது அலுவலகத்துக்கு வந்தவுடன் தனது

கையடக்கத் தொலைபேசி நிறுத்தி வைத்து விடுவார். ஜனாதிபதி வீட்டில் இருக்கும் சந்தர்ப்பத்திலும் இவ்வாறே நடந்துக் கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலநறுவையிலிருந்து கொழும்பு செல்லும் போதும் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வரும் போதும் மாத்திரமே ஜனாதிபதியின் தொலைபேசி பாவனையில் இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி பாடல் கேட்பதற்கோ, இணையத்தளம் பார்ப்பதற்கோ, பேஸ்புக் பாவிப்பதற்கோ தனது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த மாட்டார்.

தொலைபேசி பயன்பாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜனாதிபதியிடம் இருந்து நாமும் கற்றுக்கொள்வது சிறந்தது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.