யாழில் பாலகன் இடைவழியில் பரிதாப மரணம்

இருமல் சளியெனக் கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பாலகன் ஒருவர் வழியில் பரிதாபகரமான முறையில் உயிரிழந்த சம்பவம் இணுவில் பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மரணம் அடைந்தவர் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்தவரதராஐன் ஹரிஸ் மஜதுனன் (வயது நாலரை) என்பவராவார்.

நேற்றைய தினம் பகலில் குறிப்பிட்ட பாலகன் சளி இருமலுடன் காணப்பட்டுள்ளார். பிற்பகல் தாயுடன் இருந்த வேளையில் குடிக்க நீர் கேட்டு வாங்கி குடித்ததைத் தொடர்ந்து சத்தி எடுத்துள்ளார்.

உடனடியாக தனியார் மருத்துவ நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமாரினால் மேற்க்கொள்ளப்பட்ட மரண விசாரனையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.