யாழில் வயோதிபர் தற்கொலை

நோயின் கொடுமை தாங்க முடியாது வயோதிபர் ஒருவர் சாராயத்துடன் நஞ்சு மருந்தைக் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புத்தூர் வடக்கைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 81) என்பவரே மூட்டு நோயின் தாக்கத்தை தாங்க முடியாது சாராயத்துடன் நஞ்சு மருந்தைக் கலந்து குடித்து விட்டு படுக்கைக்கு சென்றுள்ளார்.

நேற்று காலையில் மகள் தந்தையை நித்திரையால் எழுப்ப முயன்ற நிலையில் அவரில் கெட்ட வாடை வீசுவதை உணா்ந்து மகள் கேட்ட போது, தான் மருந்து குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் அவருடைய உயிர் பிரிந்துள்ளது.

இவர் முன்பும் ஒரு தடவை நோயின் தாக்கத்தினால் மருந்து குடித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணையை நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்க்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.