யாழ். சுன்னாகத்தில் இளம் குடும்பப் பெண் பரிதாப பலி

தனது சிறுபிள்ளையுடன் வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் காக்கா வலிப்பு வந்து பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் றொட்டியாலடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஜெயமலர் (வயது 28) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே காக்கா வலிப்புக் காரணமாக மரணம் அடைந்தவராவார்.

தாயுடன் இருந்த பிள்ளை அம்மா அம்மா என கத்தியதைக் கேட்ட அயலவா்கள் சென்று பார்த்த போது காக்கா வலிப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில் இழுத்துக் கொண்டு இருந்துள்ளார்.

அயலவர்கள் உடனடியாக தனியார் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.

நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.