காகிதம் போல் மடக்ககூடிய தொடுதிரைகள்

காகிதம் போன்று மடக்ககூடிய தொடுதிரைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் அறிவியல் இதழில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், தென்கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை(கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப்யூ, போஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (போஸ்டெக்) சேர்ந்த டே-வூலீ ஆகியோர் தலைமையில், கணினி, தொலைக்காட்சி மற்றும் கைபேசிகள் ஆகியவற்றின் திரைகளை உருவாக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் OrganicLight Emitting Diode தயாரிப்பில் வெற்றி அடைந்துள்ளனர்.

அதாவது தற்போதுவளைந்த திரைகளின் பயன்படுத்தக்கூடிய என்ற Indium-Tin-Oxide உலோகக் கலவைக்கு பதிலாக Graphene–யை பயன்படுத்தவுள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் செலவுகளை குறைப்பதுடன் திரைகளை 2.3 மி.மீ வரை மடக்கலாம்.

மேலும் எதிர்காலத்தில் காகிதம் போல் மடக்ககூடிய திரைகள் உருவாக்குவது சாத்தியமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.