வில்லனாக அவதாரம் எடுக்கும் விமல்

தமிழ் சினிமாவில் தற்போது வில்லன்களுக்குத்தான் மார்க்கெட் எகிறிக் கொண்டு வருகிறது.

கதாநாயகர்கள் நடித்த பலரும் தற்போது வில்லன்களாக மாறி வருகின்றனர். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அவரைத் தொடர்ந்து ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

அந்த வரிசையில் தற்போது விமலும் புதிய படமொன்றில் வில்லனாக நடிக்கவுள்ளார். ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் நடித்த நவ்தீப் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விமல் வில்லனாக நடிக்கவுள்ளாராம். இப்படம் விமலுக்கு தமிழ் சினிமாவில் வேறொரு பரிமாணத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

விமல் நடிப்பில் தற்போது ‘ரெண்டாவது படம்’ தயாராகி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதைத் தொடர்ந்து பூபதி பாண்டியன் இயக்குனம் ‘மன்னர் வகையறா’ என்ற படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.