இடுப்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள் கொண்டவை.

குறிப்பாக வெயில் காலத்தில் வெந்தயகீரையை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.

வெந்தயக்கீரையின் மருத்துவ நன்மைகள்

  • வெந்தயக்கீரையை வேகவைத்து தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால், மலம் எளிதாக வெளியேறும்.
  • நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும்.
  • இதன் இலையை எடுத்துச் சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சையைச் சேர்த்துக் குடிநீர் செய்து தேன் கலந்து சாப்பிட்டுவந்தால், நெஞ்சு வலி, மூச்சடைப்பு குணமாகும்.
  • வெந்தயக்கீரையை நன்கு வேகவைத்து, சிறிது வெண்ணெய் சேர்த்துக் கலக்கி உட்கொள்ள, பித்தம் அதிகமாவதால் ஏற்படும் மயக்கம் குணமாகும்.
  • இந்தக் கீரையுடன், பாதாம் பருப்பு, கசகசா, கோதுமை நெய், பசு நெய், பால், சர்க்கரை சேர்த்து, களிபோல கிண்டி சாப்பிட்டுவந்தால், உடல் வலுவடையும். இடுப்பு வலி நீங்கும்.
  • வெந்தயக்கீரையுடன் சீமை அத்திபழத்தைச் சேர்த்து அரைத்து, கட்டிகளின் மீது பற்றுப் போட, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும். படை மீது பூசினால், விரைவில் சரியாகும்.
  • வெந்தயக்கீரையை ஊறவைத்து, அந்தத் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்துவந்தால் வாய்ப்புண் ஆறும்.
  • விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது.