மந்திகை வைத்தியசாலையை கொலைகளமாக மாற்றும் வைத்தியர்கள்

யாழ் குடாநாட்டின் சனத்தொகையில் 30 வீதமான மக்கள் வடமராட்சியில் வாழ்ந்து வருகின்றார்கள். அந்தப் பகுதியில் உள்ள உள்ள மக்களுக்கான பிரதான மருத்துவமனையாக மந்திகை வைத்தியசாலை உள்ளது.

ஆனால் அங்குள்ள வைத்தியர்களால் அந்த வைத்தியசாலை மக்களைக் கொல்லும் களமாக மாறிவருகின்றது. அண்மையில் ஹாட்லிக் கல்லுாரி மாணவன் பாம்பு கடித்து அவசர சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். தனக்கு கடித்தது பாம்பு என மாணவன் வைத்தியருக்குத் தெரிவித்தும் வைத்தியர் அதைப் பொருட்படுத்தாது இருந்துள்ளார். உனக்குப் பாம்பு கடிக்கவில்லை, தவளை கடித்துள்ளது என வைத்தியர் கூறிவிட்டு சிகிச்சை அளிக்காது இருந்துள்ளார். இரண்டு மணித்தியாலமாக மருந்து கொடுக்காது இருந்ததால் மாணவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அத்துடன் மத்தியகிழக்கு நாடொன்றில் இருந்து வந்த ஒருவர் தனக்கு தலையில் கட்டு உள்ளதாக மந்திகை வைத்தியசாலையில் காட்டிய போது அவருக்கு சத்திரிசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் சத்திரிசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த குறையிலேயே அவசரமான அலுவல் என்று விட்டு வெளியே போய்விட்டாராம். இதன் பின்னர் அவர் வந்த போது குறித்த நோயாளி இறந்துவிட்டதாக வைத்தியருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான கொலைகள் மந்திகை வைத்தியசாலை வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் இதற்கான விசாரணைகளை யாரும் நடாத்தவில்லை எனவும் தெரியவருகின்றது.  இப்படிப்பட்ட வைத்தியர்களை தொடர்ந்தும் குறித்த வைத்தியசாலையில் வைத்திருப்பது வடமராட்சி மக்களைப் பழிவாங்கவா? என வடமராட்சி மக்கள் அதிர்ச்சியுடன் கூடிய விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.