யாழில் கஞ்சா வியாபாரி கைது!

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குடும்பஸ்தர் ஒருவரை, இன்று கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைதானவர், குருநகர் பன்சல் வீதியினை சேர்ந்த 37 வயதுடைய நபரென பொலிஸார் கூறினர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்த, 14 வயது சிறுவனொருவனிடம் பணத்தினைக் கொடுத்து கஞ்சா வாங்கி வருமாறு பொலிஸார் அறுவுறுத்தியிருந்தனர். 

சிறுவனுக்கு கஞ்சாவினைக் கொடுக்க முற்பட்ட போது சிவில் உடையில் நின்ற பொலிஸார், அவரைக் கையும் மெய்யுமாக கைது செய்தனர்.