மலையேறிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்!

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டு இலங்கையர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது பயண அனுபவங்களை விளக்கியுள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த இலங்கை மலையேறிகள்,

முதலில் ஜெயந்தி குரு உதும்பால சிகரத்தை அடைந்த பின்னர், அவரை தொடர்ந்து அவரது நண்பர் ஜோஹன் பீரிஸ் சிகரத்தை அடைந்ததாக உதும்பால கூறியுள்ளார்.

சிகரத்தை அடைவதற்கான மலையேறுவதற்கான பயிற்சிகளை வழங்கும் நிறுவனம் மற்றும் சர்வதேச மலையேறும் வழிகாட்டிகள் ஆகியோர் தேவையான உணவு மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதாக ஜெயந்தி மற்றும் ஜோஹன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சிகரத்தை அடைய உதவி செய்த அனைவருக்கும் தங்களது நன்றிகளையும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.