இந்தியா- இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் எப்போது? இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் தொடர்பான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

மூன்று டி20 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி புனேயில் பெப்ரவரி 9ம் திகதி நடக்கிறது.

இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் பெப்ரவரி 12ம் திகதியும், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் பெப்ரவரி 14ம் திகதியும் நடக்கிறது.

டி20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பயிற்சியாக இந்த தொடர் நடத்தப்படுகிறது.

மேலும், டி20 உலகக்கிண்ணத்திற்கு முன்னதாக வங்கதேசத்தில் 20 ஓவர்களாக நடத்தப்படும் ஆசிய கிண்ணப் போட்டியிலும் இரு அணிகளும் விளையாட உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி 5-0 என தொடரை இழந்தது.

இந்த தொடரில் தான் ரோஹித் சர்மா 264 ஓட்டங்கள் அடித்து உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.