அளவெட்டியில் தீவிரமாக பரவும் ஆபத்தான நோய்!! சுகாதரத்துறை அசமந்தம்!!

தெல்லிப்பளை சுகாதாரபிரிவிற்குட்பட்ட அளவெட்டியில் ஆபத்தான டெங்கு நோய் தீவிரமாக பரவிவருகின்றது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை உரியமுறையில் நடவடிக்கையை எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முன்னின்று உழைத்த வைத்தியர் குழு இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் பல இன்னும் இனங்காணப்படாது இருப்பதுடன்,அந்த இடங்களில் இருந்து வேறு பல இடங்களுக்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது.

கடந்த மாதத்தில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் தலைவிரித்தாடிய டெங்கு நோயினால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அது தொடர்ந்து தெல்லிப்பழையை ஆக்கிரமித்துள்ளது.

கள்ளமாடுகள் வெட்டப்படுவதனை கட்டுப்படுத்தும் சுகாதாரத்துறையினர் ஏன் உயிர்கொல்லி நோயான டெங்கை கட்டுப்படுத்த தவறுகின்றனரென மக்கள் கேள்வி ஏழுப்பியுள்ளனர்.