மானிப்பாயில் 14 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! - மைத்துனர் கைது

14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம், செய்தவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சங்குவேலி தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய குடும்பஸ்தரே தனது மனைவியின் சகோதரியான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். நேற்று மாலை மனைவியை வெளியில் அலுவலாக கொண்டு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர், வீட்டில் தனியாக இருந்த தனது மைத்துனியான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

சகோதரி வீட்டிற்கு வந்த பின்னர் சிறுமி தனது சகோதரியிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். சகோதரி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், இளைய சகோதரியை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவரை மானிப்பாய் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.