யாழில் 147 000 ரூபா பெறுமதியான அரசு சொத்து திருட்டு! துவாரகேஸ்வரன் வீடு சுற்றிவளைப்பு!!

‘உன்னைத் திருத்திக்கொள் சமுதாயம் தானாகத் திருந்திவிடும்’ என்பது மூதாதையர் சொன்ன பழமொழி.

ஜக்கிய தேசிய கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளர் என்று இல்லாத ஒரு பதவியை சொல்லிகொண்டு திரிபவர் தியாகராஜா துவாரகேஸ்வரன்.

ஆளும் அரசாங்கத்தில் மதிப்பு மிக்க ஜனாதிபதியை சந்திக்கிறேன், மதிப்பு மிக்க பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை சந்திக்கிறேன் என்று யாழில் படிப்பறிவற்று வேலை இல்லாமல் திரியும் சில தெருக்காவாலிகளை ஊடகத்துறையினர் என்று சேர்த்து அவர்களுக்கு யாழில் விடுதிகளில் சமைத்து மிஞ்சிக் கிடக்கும் முதல்நாள் உணவை சுடாக்கி பரிமாறி சூடு ஆறமுதல் சுவைக்க விட்டு, அவர்களை வைத்து பத்திரிகையாளர் மாநாடு நடத்தி அதனை ஊடகங்களில் வர வைத்து சுய இன்பம் காண்பவர் தியாகராஜா துவாரகேஸ்வரன். 

இவரின் இத்தகைய செயலின் உச்சகட்டமாக நோர்வே நாட்டில் இருக்கும் தமிழ் தேசிய மூத்த போராளிகளையும் பிரித்தானியாவில் இருந்து வந்து மக்களுக்காக இராஜதந்திர முறையில் யாழ் குடாநாட்டில் செயல்களை அரங்கேற்றிவரும் தமிழ் மக்களுக்காகவே தம்மை அளித்து தமது வாழ்வு, மனைவி, பிரித்தானிய சுகபோக வாழ்க்கை அனைத்தையும் இழந்து யாழில் இருந்து சேவை செய்யும் போராளிகளையும் இவர் விட்டு வைத்ததாக இல்லை. 

சரி விடயத்துக்கு வருவோம்.

யாழ்ப்பாணத்திற்கு ‘வெளிச்சம்’ தருவதற்காக அரசாங்கம் அன்றிலிருந்து படாதபாடுபட்டு வருகின்றது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. மின்சாரத்தை தடையின்றி யாழ்ப்பாண மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம், குறிப்பாக மின்சாரசபை எத்தனை பாடுபடுகின்றது என்பது விசயமறிந்தவர்களுக்கு தெரியும். 

புலிகள் காலத்தில் அவர்கள் தமது பங்காக அவ்வப்போது ஆங்காங்கே இருக்கும் ‘ரான்ஸ்பேமர்’களை வெடிவைத்து தகர்த்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை அரசுக்கு சேதம் ஏற்படுத்துவதுதான் முக்கியமாக இருந்தது.

யாழ்.குடாநாட்டில் நடந்துவருகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நம்மால் அறிந்துகொள்ளமுடியவில்லை. 

துவாரகேஸ்வரனால் யாழ் பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தியில் உள்ள தனது வீட்டிற்கு பல வருடங்களாக பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மின்சாரம் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு திருட்டு மின்சாரம் பாவித்தமைக்காக ரூபா 147000 வினை குற்றப் பணமாக செலுத்துமாறு இன்று இலங்கை மின்சாரசபை தியாகராஜா துவாரகேஸ்வரனுக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்தவேளை சாப்பாட்டிற்கு யோசித்துக் கொண்டிருக்கின்ற குடும்பம் ஒன்று தனக்கு தேவையான மின்சாரத்தை திருட்டுத்தனமாக எடுத்தது என்றால் அதனை ‘திருட்டு’ என்று கூறக்கூட சற்று யோசித்திருக்க வேண்டும். ஆனால் இங்கே மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு,  ‘டெசேட்’ சாப்பிடுவதற்காக ‘கேக்’கை திருடுவது போல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

யாழ்ப்பாணத்தின் முன்னணி வர்த்தகராக தன்னைக் காட்டிக் கொள்ளும் தியாராஜா துவாரகேஸ்வரன் பல வருடங்களாக பல மில்லியன் ரூபாய்களை மின்சார சபையில் இருந்து திருடி உள்ளார்.

சாதாரண வர்த்தக நிறுவனங்கள் திருட்டுத்தனமாக  மின்சாரத்தை திருடி வந்ததைக்கூட நாம் ஆச்சரியமாகப் பார்க்கப் போவதில்லை. 

வர்த்தகர்கள் எப்போதும் தமது வர்த்தகத்தில் இலாபம் என்ற ஒன்றை மாத்திரமே யோசிப்பவர்கள். ஆனால் சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பதாக காட்ட முற்படும் தியாகராஜா துவாரகேஸ்வரன் சுண்ணாகத்தில் குடிநீருக்குள் எண்ணை கலப்பதால் ஏற்படும் தீங்குகளுக்காக போராட புறப்பட்ட மருத்துவர் சங்கங்களுடன் சேர்ந்து  கடந்த தேர்தலில் மக்களுக்காக வேலை செய்வதாக காட்டியவர்.  

வித்தியா கொலை முதல் யாழ் குடாநாட்டில் அனைத்து விடயங்களிலும் தான் மக்களின் காவலனாக மக்களின் பிரதிநிதியாக மக்களின் சேவகனாக காட்டி வரும் தியாகராஜா துவாரகேஸ்வரன்  இந்தத் திருட்டை பலவருடங்களாக செய்துவந்திருக்கின்றார் என்பதை அறிந்தபோதுதான் ஆச்சரியமாக இருந்தது.

‘உன்னைத் திருத்திக்கொள் சமுதாயம் தானாகத் திருந்திவிடும்’ என்ற வாசகங்களைத் தான் இவர்களுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டியிருக்கின்றது.