‘எதுக்கும் விஜயகலாவைச் சந்தியுங்கள்’ - துவாரகேஸ்வரனின் மூக்கை உடைத்த ரணில்

அதுவும் ஊடகவியல் கற்றவர்களுக்கு அரச ஊடகத்துறையில் வேலை வாய்ப்பு என்பது சிரிப்புக் கலந்த ஒரு பரிதாபமான நிலையாகவே இருக்கின்றது.

இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்காது யாழ்ப்பாணத்தில் தற்போது நகைச்சுவை மன்னராக இருந்துவரும் துவாரகேஸ்வரனை நம்பி ஒரு ஊடகவியலாளர் கெட்டு நொந்த கதை ஒருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

துவாரகேஸ்வரன் தனது வீரப்பிரதாபங்களை எல்லாம் வடிவேலு பாணியில் சொல்லித் திரிவதும் ஊடகவியலாளர்களுக்கு காசை வாரி வழங்குவதாலும் துவாரகேஸ்வரன் ஒரு பணம் கறக்கும் இயந்திரம் என ஊடகவியலாளர்கள் சிலர் நினைத்தனர்.  அத்துடன் யாழ்ப்பாணம் பிறஸ் கிளப்புக்கு இவர் ஆரம்பத்தில் 50,000 ரூபா பணம் வழங்கி றோலிங் கேற் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் பிரஸ்கிளப் முக்கியஸ்தர் உட்பட இரு ஊடகவியலாளர்களுக்கு மாதாமாதம் குறித்த தொகைப்பணமும் கொடுத்து வந்துள்ளார்.

அவர் பணங் கொடுத்து வந்த ஒரு சுயாதீன ஊடகவியலாளர் தனக்கு ஒரு அரச ஊடகத்தில் உங்கள் செல்வாக்கை வைத்து வேலை எடுத்து தர முடியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு உடனடியாக தலையாட்டிய துவாரகேஸ்வரன் குறித்த ஊடகவியலாளன் தொடர்பாக கதைத்துள்ளார். அதுவும் கொழும்பில் ஒரு வைபவத்தில் கலந்து கொண்டிருந்த ரணிலை பெரும் பாடுபட்டு அவர் தேனீர் குடித்துக் கொண்டிருந்த சொற்ப நேரத்துக்குள் ஊடகவியலாளனையும் அழைத்துச் சென்று சந்தித்துக் கதைத்துள்ளார்.

‘இவன் கூட்டமைப்பை போட்டுத்தாக்குவான்... எமக்கு பக்க பலமாக இருப்பான் என்றெல்லாம் அந்த சில நிமிடங்களில் கதைத்த போது ரணில் தேனீர்க் கப்பை வைத்து விட்டு துவாரகேஸ்வரனையும் ஊடகவியலாளனையும்  நிமிர்ந்து பார்த்துவிட்டு ‘இது தொடர்பாக விஜயகலாவுடன் கதையுங்கள்‘ என தெரிவித்து விட்டு துவாரகேஸ்வரனையும் பொருட்படுத்தாது அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டாராம்.

அந்த இடத்திலேயே தான் காறித் துப்ப நினைத்ததாக ஊடகவியளான்  இன்னொரு ஊடகவியலாளனுக்கு கூறி ‘ நாங்கள் கொழும்புக்கு அவருடைய பஸ்சில்தான் ஓசில போறது, பிறகு அவரை ஏன் பகைப்பான்‘ என்று பேசாமல் வந்துவிட்டேன்‘ என்று தன் மானம் மிக்க அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளானாம்.

அத்துடன் இதுவரை தான் பிறஸ்கிளப்பிற்கு 6 லட்சம் கொடுத்துவிட்டதாக துவாரகேஸ்வரன் தனது ஊடக வாலுகளுக்கு கூறியுள்ளாராம்.