ஜனாதிபதி மைத்திரியின் பொங்கல் கொண்டாட்டம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களுத்துறை, பயகலவில் உள்ள இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தை பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான ராஜித சேனாரட்ண, மஹிந்த சமரசிங்க, பௌசி, பாடசாலை அதிபர், மாணவர்கள் ஆகியோரும் உடன் கலந்து கொண்டார்கள்.

ஜனாதிபதி இங்கு பேசியவை வருமாறு:-

அனைத்து சமூகத்தினரையும்  இந்நாட்டில் ஐக்கியம், சமாதானம், நீதி ஆகியவற்றுடன் வாழ வைப்பதே எனது இலட்சியம் ஆகும்.

புதிய அரசமைப்பு கொண்டு வருவதன் மூலமோ, சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலமோ தேசிய நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் மக்கள் மத்தியில் உருவாக்க முடியாது. சமய தத்துவங்கள் மூலம் மாத்திரமே இது சாத்தியப்படும்.