கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்!

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

கிளிநொச்சிப் பகுதியில் 1,020 மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்த கிளிநொச்சிப் பொலிஸார், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதேவேளை 8,120 மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த கிளிநொச்சிப் பொலிஸார் குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது, குறித்த நபரை 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் கிராம அலுவலர் உறுதிப்படுத்திய 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையிலும் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.