மன்னாரில் இளவயதுக் கர்ப்பம் குறைவடைந்துள்ளது

போரின் பின்னரான காலங்களுடன் ஒப்பிடும் போது 2015ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் இளவயதுக் கர்ப்பம் குறைவடைந்துள்ளது என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

போரின் பின்னர் மன்னார் மாவட் டத்தில் இளவயதுக் கர்ப்பம் அதிகரித்திருந்தது. தற்போது அதனுடைய எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டுகளில் குறித்த இளவயதுக் கர்ப்பம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் உட்பட்ட பிரதேசங்களில் 2014ஆம் ஆண்டு 109 இளவயதுக் கர்ப்பிணிகள் இனம் காணப்பட்டனர். எனினும் 2015ஆம் ஆண்டு குறித்த 5 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்குட்பட்ட பிரதேசங்களிலும் 97 இளவயதுக் கர்ப்பிணிகளே இனம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாந்தை கிழக்குப் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதி போரால் பாதிக்கப்பட்டுள்ளதால் குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட வறுமை மற்றும் ஏனைய காரணிகளால் இளவயதுத் திருமணங்கள் அதிகரித்திருந்தன. அதனாலேயே இள வயதுக் கர்ப்பம் அதிகரித்திருந்தது.

இதனை இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டுகளில் இளவயதுக் கர்ப்பம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.