மகளை தாயாக்கிய தந்தைக்கு 10 சவுக்கடி, மகளுக்கு 5 சவுக்கடி

நான்கு மாதங்களாக மகளை கற்பழித்து கற்பமாக்கிய தந்தைக்கு பஞ்சாயத்து தலைவரின் ஆணைப்படி 10 சவுக்கடி கொடுக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா கிராமத்தை சேர்ந்தவர் அனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிறு வயதிலே தன் தாயை இழந்துவிட்டார். தனது தந்தையால் 4 மாதங்களாக பாலியல் ரீதியாக வேட்டையாடப்பட்டுள்ளார்.

இதனால் கிராம பஞ்சாயத்து தலைவரின் ஆணைப்படி அனிதாவின் தந்தைக்கு 10 சவுக்கு அடியும், அனிதா இதுகுறித்து எதுவும் தெரிவிக்காதலால் அவருக்கும் 5 சவுக்கடி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வை செல்போனில் விடியோ காட்சியாக படம் பிடித்து யாரோ ஒருவரால் காவல் துறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து காவல் துறையினர் 7 பஞ்சாயத்து உறுப்பினர்கள் உட்பட அனிதாவின் தந்தையையும் பாவியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அனிதா கூறியதாவது:-

பஞ்சாயத்தில் என்னை அடித்தது எனக்கு வலிக்கவில்லை, நான் அவர்களை நன்றாக அடிக்க சொன்னேன், நான் செய்த தவறு, இதுகுறித்து வீட்டில் யாரிடமும் செல்லாதது தான், அப்பா என் கையை பிடித்து இருந்தார் என்று மட்டும் கூறியுள்ளேன், என்றார்.

மேலும் அனிதா வாழும் கிராமத்தின் சமுதாய மரபின் படி கற்பழிக்கப்பட்டவர்கள் திருமணத்தை தவிர்க்க வேண்டும், அதனால் அனிதாவை திருமணம் ஆன ஒருவருக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.