யாழ்.நகரை அழகுபடுத்தல் செயற்திட்டம்!

யாழ்.நகரை அழகாக்கும் திட்டம் தொடர்பில் உலக வங்கி குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். முதற்கட்டமாக யாழ்.வீரசிங்கம் மண்டபம் அருகாமையில் தனியார் பஸ் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை உலக வங்கி முன்னெடுக்கவுள்ளது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகாமையில் அமைத்துள்ள யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணியில், தனியார் பஸ் நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்த உலக வங்கி குழுஇ மேற்படி காணியை நேரில் சென்று பார்த்து ஆராய்ந்து உள்ளனர். இதன்போது தனியார் பஸ் நிலையம் எவ்வாறு அமைக்கப்படல் வேண்டும், எந்தளவில் அமைக்கப்படல் வேண்டும் என்பவை தொடர்பில் உலக வங்கி குழுவினரால் ஆராயப்பட்டுள்ளன.

இவ் ஆராய்வின் போது யாழ்.வணிகர் கழக தலைவர், யாழ்.மாநகர சபையின் ஆணையாளர், யாழ்.மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண தனியார் பஸ் சங்கத்தின் பிரதிநிதிகள் என்போரும் கலந்து கொண்டிருந்தனர்