ஸ்டார்ஸ்களை மாற்றிக் கொள்ளும் அஜித், விஜய்

மலையாள சூப்பர் ஸ்டார்கள் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் தலைகாட்டி வருகின்றனர். 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துடன், மம்முட்டி இணைந்து நடித்திருந்தார்.

விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் மோகன்லால் நடித்திருந்தார்.

தற்போது அப்படியே மாற்றி பரதன் இயக்கும் விஜய் 60வது படத்தில் மம்முட்டி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

அதேபோல் அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்தில் மோகன்லால் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.