பேய் தினமாக மாறப்போகும் காதலர் தினம்

காதலர் தினமென்றாலே தமிழ் சினிமாவில் எப்போதும் ரொமாண்டிக்கான படங்கள் தான் ஸ்பெஷலாக இருக்கும். ஆனால் இந்த வருடம் டெரர்ராக பேய் படங்களும், திகில் படங்களும் வெளியாக இருக்கிறது.

ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடித்த மிருதன் பிப்ரவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடித்த பேய்ப்படமான சவுகார்பேட்டை, அஸ்வின், ஷிவதா நடிப்பில் உருவான திகில் படமான ஸீரோ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியாக போகும் ஜில் ஜங் ஜக் என படங்கள் ரிலீஸுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.