ரசிகர்களை பயமுறுத்துவதில் சுந்தர்.சி கைதேர்ந்தவர் : சித்தார்த்

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘அரண்மனை’.திகில் படமான இது பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதனை தெலுங்கில் ‘சந்திரகலா’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டார். தெலுங்கிலும் இந்த படம் வெற்றி பெற்றது.

இதனையடுத்து ‘அரண்மனை–2’ என்ற பெயரில் சுந்தர்.சி இயக்கிய படமும் வெளியாக உள்ளது.இந்த படத்தையும் தெலுங்கில் ‘கலாவதி’ என்ற பெயரில் டப்பிங் செய்து சுந்தர்.சி வெளியிடுகிறார். வருகிற 23–ந்தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

‘கலாவதி’ படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. தெலுங்கானா திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜ் சி.டி.யை வெளியிட்டார்.விழாவில் சுந்தர்.சி, குஷ்பு, நடிகர் சித்தார்த் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில சித்தார்த் பேசியதாவது:–ரஜினி, கமல் ஆகியோரை வைத்து படம் தயாரித்து வந்த சுந்தர்.சி தற்போது என் போன்ற நடிகர்களை வைத்தும் வெற்றி படங்களை இயக்கி வருகிறார்.ரசிகர்களை பயமுறுத்துவதில் சுந்தர்.சி கைதேர்ந்தவர். எப்படி திரில் படங்களை எடுக்க வேண்டும் என்பதை அறிந்தவர்.

‘சந்திரகலா’ போல் இந்த ‘கலாவதி’யும் ரசிகர்களை பயமுறுத்தும்.இதுபோன்ற படங்களில் நான் நடிப்பது இதுதான் முதல் தடவையாகும். இந்த படம் தெலுங்கில் வருவது சந்தோஷமாக உள்ளது. நான் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் ரசிகர்கள் இதனை வரவேற்பார்கள். வருகிற 23–ந்தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

இவ்வாறு சித்தார்த் கூறினார்.