த்ரிஷா, நயன்தாராவை தொடர்ந்து அஞ்சலி

சகலகலா வல்லவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரீ ஆனவர் அஞ்சலி. இவ்வருடத்தில் அஞ்சலி நடிப்பில் தொடர்ந்து மாப்ள சிங்கம், இறைவி, தரமணி, பேரன்பு போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பற்றி கூறும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அஞ்சலி.

ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தை இயக்குனர் சர்வேஷ் இயக்குகிறார், படத்திற்கு காண்பது பொய் என்றும் பெயரிட்டுள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், எளிமையான, எதார்த்தமான நடிப்பை வெளிப்பத்தும் திறன் கொண்ட அஞ்சலி இப்படத்திற்கு ஏற்றவராவார். ஜனவரி 20ம் தேதி முதல் தொடங்கவுள்ள இப்படம் கண்டிப்பாக பெண்களுக்கான கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் என்று கூறுகிறார்.

த்ரிஷா, நயன்தாரா இருவரும் அண்மையில் பெண்கள் மையப்படுத்திய கதையில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.