கெத்து படத்தின் முதல் 4 நாள் பாக்ஸ் ஆபீஸ் விவரம்

உதயநிதி ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம் ‘கெத்து’. இப்படம் கடந்த ஜனவரி 14-ந் தேதி பொங்கல் தினத்தையொட்டி வெளிவந்தது. இப்படத்தில் எமி ஜாக்சன், விக்ராந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கியிருந்தார்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’ போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு உதயநிதியின் நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

இந்த படத்தோடு பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’, விஷாலின் ‘கதகளி’, பாலாவின் ‘தாரை தப்பட்டை’ ஆகிய படங்களும் வெளிவந்தது.

இதில் கெத்து படம் முதல் 4 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5 கோடியே 50 லட்சம் வசூலாகியுள்ளது. மற்ற இடங்களில் இப்படத்தின் வசூல் விவரங்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை.

ஒரே நேரத்தில் நான்கு பெரிய படங்கள் வெளியானதால் படத்தின் வசூல் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சினிமா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த படம் போலவே மற்ற படங்களும் கணிசமான வசூலையை பெற்றுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.