மாடியில் இருந்து தவறி விழுந்தும் அசால்டாக நடந்து சென்ற குழந்தை

நமக்கு ஒரு சிறு காயம் ஏற்பட்டாலேயே அலறி துடித்துவிடுவோம். ஆனால் பிரேசிலில் குழந்தை ஒன்று 2வது மாடியில்இருந்து விழுந்தும் ஒன்றுமே ஆகாதது போல் எழுந்து நடந்து சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் டி.ஆர்.ஆர். பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புஒன்றின் 2வது மாடியில் இருந்து ஒன்றரை வயதான செவினா என்ற குழந்தை தவறி கிழே விழுந்துள்ளாள்.இதை பார்த்ததும் பொது மக்கள் பதறியபடி ஓடி வந்துள்ளனர். ஆனால் குழந்தையே சிறு காயங்கள்கூட இல்லாமல் உயிர் தப்பியுள்ளாள். மேலும் விழுந்த சில நொடிகளுக்கெல்லாம் எழுந்து நடக்கமுயற்சி செய்துள்ளார்.

இதை பார்த்த அங்கிருந்தவர் ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர். குழந்தை மாடியில் இருந்து விழும் போது குறுக்கே சென்ற டெலிபோன் வயரில் சிக்கியுள்ளது. இதனால் வேகம் குறைந்து கிழே விழுந்ததால் பலத்த அடியோ, காயமோ ஏற்படவில்லை என்று  கூறப்படுகிறது.