19. 01. 2016 இன்றைய ராசிப் பலன்

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணவரவு திருப்தி தரும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மிதுனம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்கும் சாட்சி கையப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

கடகம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

சிம்மம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கன்னி
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

துலாம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்காதீர்கள். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

விருச்சிகம்
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

தனுசு
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

மகரம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

கும்பம்
பழைய சிக்கல்களை தீர்க்க புது வழி பிறக்கும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

மீனம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்ககள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே