சர்வதேசத்திடம் முறையிடுவது எப்படி!! வடக்கு மாகாணசபையில் நடப்பது என்ன?

வடக்கு மாகாணசபையில் உறுப்பினர்களாக இருக்கும் சிவாஜிலிங்கம், ரவிகரன் போன்றவர்கள் இடக்கு முடக்கான பிரேரணைகள் கொண்டு வருவதில் கில்லாடிகள். இந்தப் பிரேரணைகளால் திக்குமுக்காடிப் போவது யாரினெனி்ன் வடக்கு மாகாணசபையின் பேரவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானமே.

சிவாஜிலிங்கம், ரவிகரன் கொண்டுவரும் பிரேரணைகளில் பெரும்பாலானவை சர்வதேசத்திடம் முறையிடுவதற்கான கோரிக்கையாகவே இருக்கும்.
ஆசிரியர் நியமனத்திற்குக்கூட சிவாஜிலிங்கம் சர்வதேச சமூகத்திடம் முறையிடக் கோரியதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சிங்களவர்கள் அத்துமீறி வடபகுதியில் மீன்பிடிப்பது தொடங்கி வடக்குக் காடுகள் முஸ்லீம்களால் அழிக்கப்படுவது வரை அனைத்துக்கும் சர்வதேசத்திடம் முறையிடுவதற்கான பிரேரணைகளே வடக்கு மாகாணசபையில் கொண்டுவரப்படுவதுண்டும். அவ்வாறு கொண்டு வரப்படும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுவிடும்.

ஆனால் அந்தப் பிரேரணைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்களை யாருக்கு அனுப்புவது என்று பேரவைத்தலைவர் சி.வி.கே குழப்பியுள்ளார். அதன் பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஐ.நாவிற்கு கடிதம் எழுதியுள்ளார் சி.வி.கே சிவஞானம்.

ஐ.நா அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தைப் பார்வையிட்ட அந்த அதிகாரிகள் ‘உங்களுக்குள் பேசித்தீர்க்க வேண்டியவற்றை எமக்கு ஏன் அனுப்புகின்றீர்கள்?‘ என கேட்டு பதிலனுப்பியுள்ளனராம்.

பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் தங்களது ஆக்ரோசமான கருத்துக்கள் வரவேண்டும், அதைப் பார்த்து வடக்கு மாகாணத்தில் உள்ள ஏமாளித் தமிழ்ச்சமூகம் புல்லரிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வடக்கு மாகாணசபையில் சில உறுப்பினர்கள் பிரேரணை நிறைவேற்றுகின்றனரே தவிர வேறொன்றுக்கும் இல்லை.