இரண்டு கைகளிலும் பந்துவீசி மிரள வைத்த இந்திய வீரர்! (வீடியோ இணைப்பு)

சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டியில் விடர்பா அணியின் அக்செய் கர்னெவர் தனது 2 கைகளிலும் பந்துவீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளார்.

இந்தியாவில் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் பரோடா- விடர்பா அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய விடர்பா அணி 5 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் பரோடா அணி துடுப்பெடுத்தாடும் போது விடர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்செய் கர்னெவர் இரண்டு கைகளிலும்  பந்துவீசினார்.

வலது கை துடுப்பாட்ட வீரருக்கு இடது கையிலும், இடது கை துடுப்பாட்ட வீரருக்கு வலது கையிலும் மாறி மாறி பந்து வீசி அனைவரையும் வியக்க வைத்தார்.

இந்தப் போட்டியில் இர்பான் பதான் தலைமையிலான பரோடா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.