பெண்ணை கடத்தி ரகசிய அறையில் பல வருடங்களாக பாலாத்காரம்

சுவீடன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஒருவர் 38 வயது பெண்ணை கடத்தி சென்று தனது வீட்டில் பூமிக்கு அடியில் உள்ள ஒரு ரகசிய அறையில் அடைத்து வைத்து தனது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்து உள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டாக்டரின் பெயர் வெளியிடப்படவில்லை. இவர் 38 வயது பெண் ஒருவரை வீல் சேரில் வைத்து 350 மைல் தூரம் தள்ளி சென்று உள்ளார். தெற்கு சுவீடன் கிற்ஸ்டியன்ஸ்டேடு என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு கடத்தி சென்று உள்ளார். போகும் வழியில் தன்னை அடையாளம் காண முடியாத படி வெவ்வேறு உருவங்களை தரக்கூடிய 2 ரப்பர் முக மூடிகளை அணிந்து உள்ளார்.

டாக்டர் அந்த பெண்ணை பல நாட்களாக தனது வீட்டில் உள்ள நிலவறையில் அடைத்து வைத்து தனது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி உள்ளார். 5 வருடங்களுக்கு முன் அந்த 60 சதுரடி நிலவறை சுரங்கபாதை கட்டபட்டு உள்ளது.அதே அறையில், கழிவறை மற்றும் சமையலறையும் இருந்தது. இப்படி ஒரு இடம் இருப்பது சுற்றி உள்ளவர்கள் யாருக்கும் தெரியவில்லை.

இது குறித்து பெண்ணின் நண்பர் ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். டாக்டரை ஒரு கட்டுக்கதை கூறி போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

இது குறித்து அரசு வக்கீல் கூறும் போது

இந்த பெண்ணை பல ஆண்டுகள் அடைத்து வைத்து போதை மருந்து கொடுத்து தனது பாலியல் தேவைகளுக்கு டாக்டர் பயன்படுத்தி உள்ளார்.குற்றவாளி இந்த அறையில் வைத்து மேலும் பலரை இது போல் கொடுமை செய்து இருக்கலாம்.என கூறினார்

டாக்டர் பெண்ணை கடத்தியதையும் அவருக்கு போதை மருந்து கொடுத்ததையும் ஒப்பு கொண்டு உள்ளார். ஆனால் கற்பழிப்பு குற்றசாட்டை ஒத்துக்கொள்ளவில்லை.