கள்ளக்காதலின் விளைவு: கணவனை குண்டு வீசும் நிலைக்கு சென்ற மனைவி

நிலத்தை அப­க­ரிப்­ப­தற்­காக கள்ளக் காத­லனுடன் இணைந்து கண­வரை கொலை செய்ய முயன்ற பெண்ணை நீர்­கொ­ழும்பு பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

குறித்த பெண் , கள்ளக் காதலன னுடன் இணைந்து கைக்குண்டு வீசியே கொலைசெய்ய முயற்சித்துள்ளார்.

குறித்த கள்ளக்காதலன் தாக்குதல் நடத்­தப்­பட்ட அன்று இத்தா­லிக்கு தப்பிச் சென்­றுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

நீர்­கொ­ழும்பு ஸ்ரீ விக்­கிர­ம­ரா­ஜ­சிங்க மாவத்­தையைச் சேர்ந்த 42 வயது பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைக்குண்டு வீச்சுத் தாக்­கு­தலில் காயங்­க­ளுக்கு உள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டவர் சந்­தேக நபரின் கண­வ­ராவார்.

சந்­தேக நப­ரான பெண்ணும் அவ­ரது கண­வரும் அவர்­க­ளது இரண்டு பிள்­ளை­க­ளுடன் இத்­தா­லியில் தொழி­லுக்­காக சென்று வசித்து வந்­துள்­ளனர்.

அங்கு வசிக்கும் இலங்­கையைச் சேர்ந்த நப­ருடன் அவர்­க­ளுக்கு நெருங்­கிய பழக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் சந்­தேக நப­ரான பெண்­ணுக்கும் குறித்த நப­ருக்கும் இடையில் கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்­டுள்­ளது.

அந்தக் குடும்­பத்­தினர் இலங்கை திரும்­பிய பிறகும் இந்தத் தொடர்பு தொடர்ந்­துள்­ளது. இதன்பின்னரே கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.