கர்ப்பிணி பெண்ணினால், 7 வயது சிறுமி பாலாத்காரம்

வயதான சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

17 வயதினையுடைய திருமணமான கர்ப்பிணி பெண் ஒருவர் மீது இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, தனது தாயுடன் குளிப்பதற்கு சென்ற பொழுது அங்கு கர்ப்பிணி பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை , தாய் குளித்து வரும்வரையில் குறித்த சிறுமியை, கர்ப்பிணி பெண்ணின் வீட்டிற்கு அனுப்பிய சந்தர்ப்பத்திலே, இந்த துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் , குறித்த 7 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

ஆடையில் இரத்தம் சிந்திய நிலையில், குறித்த சிறுமி வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தாய் வினவியதின் பொழுது, குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவந்தாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர், குறித்த சிறுமியின் தந்தை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் , குறித்த கர்ப்பிணி பெண்ணை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதற்கமைவாக, நீதிமன்ற மருத்துவ பரிசோதனை மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கர்ப்பிணி பெண், பினையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.