கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றப்பட்டார்

 கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீநிக சஞ்ஜீவ ஜெயக்கொடி, சிலாபம் பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட வென்னப்புவ பொலிஸ் நிலையத்துக்கு நாளை செவ்வாய்க்கிழமை முதல் இடமாற்றம் பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரியாக கந்தாணை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.கஹந்தவெல, கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது.