யாழ். உயர்தர மாணவி தற்கொலை

நேற்று  மாலையில் கோவிலுக்கு பூசைக்காக சென்று விட்டு தந்தை வீடு திரும்பிய நிலையில் மகள் படிக்காது படம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். தந்தையார் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு படிக்கும் படி கூறியுள்ளார்.

இதனால் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு 8.00 மணியளவில தாயார் மகளுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அழைத்த போது மகள் வெளிவரவில்லை.

தொடர்ந்து கதவை உடைத்து உள் சென்று பார்த்தபோது யன்னலில் தூக்கிட்ட நிலையில் கணப்பட்டுள்ளார்.

இவ்வாறு மரணம் அடைந்தவர் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் சுதுமலை மேற்கு மானிப்பாயைச்சேர்ந்த ஜெயராமசர்மா ஜெயரம்யா வயது 17 என்பவராகும்.

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்ட போதிலும் காப்பாற்ற முடியவில்லை.

இன்று  பகல் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.