மாரடைப்பைத் தடுக்கும் மாமருந்து மருதம்பட்டைப் பொடி!

இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு காரணம். இரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதம்பட்டைப் பொடிக்கு உள்ளது. அதேபோல் இதயத்தை வலுவுடன் வைக்கும் ஆற்றல் வெண்தாமரைப் பூவின் பொடிக்கு உள்ளது.

இரண்டு கிராம் அளவிற்கு ஒவ்வொரு பொடியையும் எடுத்து, வெந்நீர் அல்லது பாலில் கலந்து காலை, இரவு உணவுக்குப் பின் பருகினால் இரத்தக் குழாய் அடைப்பு வராது. அடைப்பு இருப்பின் நீங்கும். காலை உணவுக்கு முன் ஒரு துண்டு இஞ்சியும், மதியம் சாப்பாட்டிற்குப் பின் இரண்டு பூண்டு பல்லையும் நீருடன் கலந்து மென்று விழுங்க வேண்டும்.

தினம் இரு வாழைப்பழம் (சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்) காலை உணவுக்குப் பின் ஒன்றும், மதிய உணவுக்குப் பின் ஒன்றும் சாப்பிடவும். 20 வயது முதற்கொண்டு இதைச் செய்தால் மேற்கண்ட அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம், மாரடைப்பையும் தடுக்கலாம்.

மேலும் துரித உணவு, கொழுப்பு உணவு, பாக்கட் உணவுகளைத் தவிர்த்து, காய்கறி, கீரை, பழங்கள், நமது கிராமத்து பலகாரங்களைச் சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.