மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிருத்விராஜின் கர்ணன்

மலையாள படஉலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் பிருதிவிராஜ். இவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான அனைத்து படங்களும் சூப்பர்ஹிட் ஆனது.இதன்மூலம் கடந்த ஆண்டு அதிக வெற்றிப்படங்களை கொடுத்த கதாநாயகன் என்ற சிறப்பை பிருதிவிராஜ் பெற்றார்.

இந்த ஆண்டும் பிருதிவிராஜ் நடிப்பில் பல மலையாள படங்கள் தயாராகிறது.அதில் ஒரு படத்தின் பெயர் ‘கர்ணன்’ இந்த படத்தின் பட்ஜெட் ரூ.45 கோடி என்பது மலையாள படஉலகினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

காரணம் மலையாள படங்கள் இதுபோன்று பிரம்மாண்டமாக செலவு செய்து தயாரிக்கப்படுவது கிடையாது. சில கோடி செலவிலேயே தயாரிக்கப்படுகின்றன.அபூர்வமாக தயாரிக்கப்படும் பிரம்மாண்ட மலையாள படங்கள்கூட இந்த அளவுக்கு செலவு செய்யப்படவில்லை.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டிகூட இதுபோன்ற பிரம்மாண்ட தயாரிப்பில் நடித்தது இல்லை.மலையாள படஉலகின் முதல் பிரம்மாண்ட படம் என்ற சிறப்புடன் தயாராகும் ‘கர்ணன்’ பற்றி நடிகர் பிருதிவிராஜ் கூறியதாவது:–கர்ணன் படம் ரூ.45 கோடி செலவில் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. இதனால் இந்த படத்தை 3 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும் ஆங்கிலம், இந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ‘கர்ணன்’ படம் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.