தளபதி 63 யில் ஷாருக்கான் உறுதி? அதிலும் இப்படி ஒரு ரோல்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பார் என தகவல் வெளிவந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. 

அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடியது.  அப்போது மைதான அரங்கில் ஷாருக் கான் அருகில் அட்லீ அமர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. அதேநேரத்தில் நடிகர் ஷாருக்கான் அட்லீயை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தார். இதனால் ஷாருக்கான் தளபதி 63 படத்தில் நடிக்க வைக்கத்தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என வதந்திகள் பரவ அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் படக்குழு. 


இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால், தளபதி 63 படத்தின் கடைசி 15 நிமிடத்தில் மட்டும் ஷாருக் கான் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்று கூறப்படுகிறது. எனினும் அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.