சிம்பு பட நாயகியின் துணிச்சல் முடிவு : ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ’ரோல்'

இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, பிரபு, ஷர்மா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் சார்லின் சாப்ளின் 2. இந்தப்படத்தில் ஷர்மா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.

தற்போது ஷ்ர்மா திருநங்கை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், இதில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதாவது இந்தப்படத்தில் திருமணம் செய்த பின்னர் ஹீரோவிற்கு ,இவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்ற உண்மை தெரிந்தபின்  என்ன நடக்கும் என்பதுதான்  படத்தின் கதை என்றும் இப்படத்தை பற்றிய செய்திகள் வெளியாகிறது.