’தளபதி 63’ படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி!

‘தளபதி 63’ படத்தில் மீண்டும் இன்னொரு நாயகி இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை  ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது  

விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின.

படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று பபிடிப்பு தளங்களிலிருந்து அவ்வப்போது புகைப்படங்களின் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கங்களை உற்சாகப்படுத்தியதையடுத்து  தற்போது இந்தப் படத்தில் மேயாத மான் பட நாயகி இந்துஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் வருகிற  தீபாவளியன்று திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.