வவுனியாவில் 14ஆவது ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா!

வவுனியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு 14ஆம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா நடைபெற்றுள்ளது. 

வவுனியா, உக்குளாங்குளம் சீர்திருத்த விளையாட்டுக்கழக மைதானத்தில் மகளிர் அமைப்பின் தலைவி சிவகுமார் திவியா தலைமையில் இவ்விழா நடைபெற்றுள்ளது. 

 வவுனியா - பண்டாரிகுளம், உக்குளாங்குளம் கிராம மகளிர் அமைப்பானது மகளிர் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் விளையாட்டுப் போட்டி ஒன்றை முன்னெடுத்து வருகின்றது. 

 இவ்வருடம் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியின் போது பணிஸ் சாப்பிடுதல், சாக்கோட்டம், தேங்காய் திருவுதல், கயிறு இழுத்தல், சங்கீத கதிரை, வினோத உடை போட்டிகள் என்பன இடம்பெற்றுள்ளன. 

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், செ.மயூரன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, வவுனியா உதவி பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி, வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா, கிராம அலுவலகர் ந.ரேனுஷா, சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ஜோ.ஜெயக்கெனடி, வவுனியா நகரசபை உறுப்பினர்களான சு.காண்டீபன், எஸ்.சுமந்திரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.