வெளிநாட்டில் இருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த பேரியான சம்பவம்!

வெயில் தாகத்தில் சோடா என மண்ணெண்ணையை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே சோடா போத்தலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை சோடா என கருதி அருந்தியுள்ளார்.

இதனையடுத்த குறித்த சிறுவனை வீட்டார் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.