ஏ.ஆர் முருகதாஸ் படத்தின் ’’தர்பார் போஸ்டர்’’ கூட சுட்டதுதானா ?

சென்ற வருடம் மிகப்பெரும் பொருட்செலவில் விஜய் நடிப்பில் ஏ.ஆர்  முருகதாஸ் தயாரிப்பில் உருவானது சர்கார் படம். இதன் கதை வருண் ராஜேந்திரனுடையது என்ற சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகு வருண் ராஜேந்திரனுக்கு உரிய செட்டில் செய்து படத்தை திரைக்கு கொண்டுவந்தனர்.

இதற்கு முன்னர் வெளியான கத்தி படத்திலும் முருகதாஸிற்கு இதேபோன்ற சோதனை ஏற்பட்டது.  

இந்நிலையில் இன்று ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கவுள்ள படமாக தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் இந்த போஸ்டர் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் நடிப்பில் வெளியான கில்லிங் கன்தர் என்ற போஸ்டரை காப்பியடித்த்து போல் உள்ளதாக சமூகவலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.