யாழ் பயணிகள் பேரூந்து மர்ம விபத்து! ஒருவர் கொலை, பயணிகள் பலர் ஆபத்தான நிலையில்!!

யாழ்ப்பாண வடிவேலு தியாகராஜா துவாரகேஸ்வரனின் பேரூந்து மர்ம விபத்தை இன்று அதிகாலை சந்தித்தது.

இவ்விபத்தில் ஒருவர் கொலை, இருவர் ஆபத்தான நிலையில், மேலும் பஸ்சில் பயணித்த பலர் சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. 

மோசடி வியாபாரி தியாகராஜா துவாரகேஸ்வரனின் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் பேரூந்து இரட்டை பெரிய குளத்தில் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரிப்பர் வாகனத்துடன் அதிக வேகத்தில் மோதி உள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவர் வாகனத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவருடைய சடலம் வவுனியா மருத்துவமனையில் பாரப்படுத்தபட்டுள்ளது. இருவர் ஆபத்தான நிலையில் வவுனியா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பஸ்சில் பயணித்த சுமார் 15 வரையான பயணிகள் சிறுகாயங்களுக்கு உள்ளாகியதுடன் 03 பேர் ஆபத்தான நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

வவுனியா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தியாகராஜா துவாரகேஸ்வரன் தனது பயணிகள் பேரூந்தில் வெள்ளவத்தைப் பகுதியில் அப்பாவி பொதுமக்களை ஏற்றி அதனைக் கொண்டு சென்று தனது கொழும்பு கடையில் நிறுத்திவிட்டுப் பயணிகள் பேரூந்தில் பலசரக்குப் பொருட்களை ஏற்றி இரவு 11 மணிக்குப் பின்னர் பேரூந்துக்குத் திருஷ்டியை விரட்ட அடிக்கடி சாம்பிராணி புகை காட்டி யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பார். 

அவருடைய வாகனச் சாரதியை பயணிகள் பேரூந்தை அதிகாலை 4 மணிக்கு முதல் யாழ்ப்பாணத்திற்குச் சென்றடையுமாறு கட்டளையிடுவார். 

துவரகேஸ்வரனின் கட்டளைப்படி யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பேரூந்தை மரண வேகத்தில் சாரதி செலுத்தி வந்துள்ளார். அப்போது பேருந்து வீதியில் நின்ற ரிப்பர் மற்றும் லொறி ஆகியவற்றுடன் அதிக வேகத்தில் மோதியதாகத் தெரிய வருகிறது.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன ஊழல்களை தடுப்பதற்கான புலனாய்வுத் தகவல்

பயணிகள் வாகனச் சட்டப்படி நடத்துனர் வாகனத்தின் சாரதி வாகனத்தைச் செலுத்தும்போது அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் தியாகராஜா துவாரகேஸ்வரனின் வாகனத்தில் நடத்துனரின் ஆசனத்தில் விதுரன் என்பவர் யாழ்ப்பாணத்தில் இருந்து முறுகண்டி கோவில் வரைக்கும் வந்துள்ளார். வாகனம் அடிபடப் போகிறது என்று தெரிந்ததும் விதுரன் வாகனத்தைவிட்டு முறுகண்டியில் இறங்கிவிட்டார். 

பயணத்தின் போது சட்டப்படி வாகனம் விபத்துக்கு உள்ளாகும் சந்தர்ப்பத்தில்  பயணிகளுடன் பேரூந்து நடத்துனர் இருக்கவேண்டும். 

நடத்துனர் இல்லாமல் பேரூந்து விபத்துக்குள்ளானால் கப்புறுதிப் பணம் எடுக்க முடியாது. 

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர் இளங்கோ என்பவர் நடத்துனர் இருந்ததாகப் போலி பெயர் கொடுத்து பேரூந்துக்கான விபத்துக் காப்புறுதியாக ஒரு கோடியே 55 இலட்சம் எடுக்க முயற்சிப்பதாகத் தெரிய வருகிறது. 

இதற்கு 5 இலட்சம் நன்கொடையாகத் தருவதாகத் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன. 

இதே நேரம், மேலும் இரண்டு பேருந்துகளைத் தியாகராஜா துவாரகேஸ்வரன் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. 

இந்தத்திட்டத்தை அமுல்படுத்த தனது பழைய பேரூத்தை விபத்திற்கு உள்ளாக்கி காப்புறுதி பணம் எடுக்க முயற்சித்து வருவதாகத் தெரிய வருகிறது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் லொறி மீது மோதல்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் லொறி மீது மோதல்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் லொறி மீது சொகுசு பேரூந்து மர்மமான முறையில் மோதியது. இரவு 11 மணியளவில் ஈரப்பெரியகுளம் கல்குண்டான்மடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது வேகமாக வந்து மர்மான முறையில்  மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார். எட்டுப் பேர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

பேரூந்து சாரதியைக் கைது செய்துள்ள பொலிசார், அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். டயர் மாற்றப்பட்டுக் கொண்டிருந்த லொறி ஒன்றின் மீதே இந்த பேரூந்து மோதியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

டயர் மாற்றுவதற்கு உதவியாக நின்றிருந்த சிறிய படி ரக லொறியொன்றும் இந்தச் சம்பவத்தின்போது சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

டயர் மாற்றுவதில் ஈடுபட்டிருந்த மருதங்கடவலையைச் சேர்ந்த 38 வயதுடைய எம்.நஸீர் மர்மமான முறையில்  இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

அவருடன் உதவிக்கு நின்றிருந்த வேறு மூவர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் பேரூந்தில் பயணம் செய்த ஐந்து பயணிகளும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.