18. 01. 2016 இன்றைய ராசிப் பலன்

மேஷம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.ய உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ரிஷபம்

அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

மிதுனம்

சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

கடகம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

சிம்மம்

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். வெளியூரிலிந்து நல்ல செய்தி வரும். நேர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

கன்னி

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

துலாம்

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

விருச்சிகம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

தனுசு

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

மகரம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

கும்பம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த&பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு ,ஊதா

மீனம்

கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்